வேலூரில் ரூ.5.7யில் கோடி காவல் கட்டளை கட்டுப்பாடு
மையம், குற்றங்கள் குறையும் வேலூர் சரக டிஐஜி முனைவர் முத்துசாமி பேட்டி
vido link https://youtu.be/NTQSKECIcvk
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரூ.5.7 கோடி செலவில் மாவட்டத்தில் உள்ள 28 காவல்நிலையங்களிலும் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வேலூர் மாநகரை கண்காணிக்கும் சிசிடிவி கண்கானிப்பு கேமராக்கள் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட கண்காணிக்கும் கேமரா காட்சிகளை ஒரே இடத்தில் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் காவல் கட்டளை மற்றும் கட்டுபாடு மற்றும் பதிலளிக்கும் அறையை காணொளி காட்சி மூலம் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் பின்னர் குத்துவிளக்கேற்றி வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி அதனை துவங்கி வைத்தார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்
தமிழகத்திற்கும் ஆந்திராவுக்கும் இடையே
போதை பொருட்கள் கடத்தலை தடுப்பது குறித்து
இருமாநில காவல்துறையின் உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டமும் நடந்தது
பின்னர் வேலூர் சரக
காவல்துறை துணை தலைவர் முத்துசாமி
கூறுகையில் இந்த காவல் கட்டளை
கண்காணிப்பு பதிலளிக்கும் மையம் மூலம் அனைத்து
சிசிடிவி கேமரா பதிவுகளையும் மற்றும்
தமிழக ஆந்திர எல்லை சாலைகளையும்
கண்காணிக்க முடியும் இதன் மூலம் குற்ற
செயல்கள் தடுக்கபடுவதுடன் குற்றவாளிகளும் எளிதில் பிடிபடுவார்கள் மேலும்
காவல்துறையினர் சரியாக பணிக்கு செல்கின்றனரா
என காவல்நிலையங்களையும் இந்த மையம் மூலம்
கண்காணிக்க முடியும் என்று கூறினார்

Comments
Post a Comment